Nakshtra Seva

Home Information Products Cart Checkout

Nakshtra Seva

மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவருக்கும், அவரவர் கர்ம வினையே லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக்கிரகங்களாகவும் அமர்ந்து, பெற்றோரையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கைத் துணையையும், வாழ்வின் சுக துக்கங்களையும் தீர்மானிக்கின்றன.

கிரகங்களால் ஏற்படும் அதீத துன்பங்கள், நம்மையும் அறியாமல் நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் போது குறைய வாய்ப்பு உண்டு. அதையே நம்முடைய நட்சத்திரங்களுக்குரிய ஆலயங்களை அறிந்து கொண்டு அங்கு சென்று வழிபட்டால், பெரிய விளைவுகளின் தாக்கத்தையும் குறைத்துக் கொள்ள வாய்ப்பு உண்டாகும்.

அதன்படி அவரவர் நட்சத்திரக்குரிய ஆலயங்களை இங்கே பார்க்கலாம். இந்த ஆலயங்களுக்கு உங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று நம்பிக்கையுடனும், ஆத்ம சுத்தியுடனும் சென்று வழிபட்டால் வாழ்வில் புதிய வெளிச்சம் பிறக்கும்.